போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கூச்சலிட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது..
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
#Lanka4
#Sri Lanka Teachers
#Sri Lankan Army
Prabha Praneetha
2 years ago

ஹோமாகம, பிடிபன சந்திக்கு அண்மித்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கூச்சலிட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த விகாரை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்ட போது, லொறியில் சென்ற ஒருவர் கூட்டத்தை நோக்கி கூச்சலிட்டு வேகமாக சென்றுள்ளார்.
துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், லொறியை துரத்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம, பிடிபன வடக்கில் 43 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மற்றும் இவர் மதச் சடங்குகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், மதத்தை கடைப்பிடிக்கும் உரிமைக்கு சவால் விட்டதற்காகவும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



