இலங்கையில் 1 கோடி மக்கள் உட்கொள்ளக்கூடிய உணவு வீண் விரயமாக்கப்பட்டுள்ளது!

#SriLanka #Food #Healthy #Health #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இலங்கையில் 1 கோடி மக்கள் உட்கொள்ளக்கூடிய உணவு வீண் விரயமாக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் கடந்த காலங்களில் அதிகளவான உணவுகள் வீண் விரயமாக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் 19 சதவீதமும், பழங்களில் 21 சதவீதமும் போக்குவரத்தின் போது அழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டில் 1 கோடி மக்கள் உட்கொள்ளக்கூடிய உணவு வீண் விரயமாக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதாலும், பொருட்களை சேமித்து கொண்டு செல்லும்போதும் தேவையான தரத்தை பின்பற்றாததாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் அழிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் 221,955 மெற்றிக் தொன் காய்கறிகளும் 290,151 மெற்றிக் தொன் பழங்களும் அழிக்கப்படுகின்றன என்று விவசாய அமைச்சு தெரிவிக்கிறது.

அறுவடைக்குப் பின்னரான சேதத்தினால் நாடு கிட்டத்தட்ட 40 சதவீதமான அறுவடையை இழப்பதாகவும் உணவு வீணாக்கப்படுவதைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!