அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகளில் எப்படி இந்தியர்களுக்கு அதிக IT வேலை கிடைக்கிறது தெரியுமா?

உலகில் IT தொழில்நுட்பமே ஆண்டுகொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அதன் ஆதிக்கம் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருப்பது புதிய சாப்ட்வேர்(software)வருகைகள் காட்டுகிறது.
இதனால் பல நன்மைகள் இருந்தாலும் வரப்போகும் தீமைகளும் கோடிகளைத் தாண்டும் என்பதும் நிச்சயம்.
நடக்கும் ரஸ்யா உக்ரைன் போர் அதற்க்கு காரணம்.
ஒவ்வொரு நாடுகளும் ஆயுதம். ஆள் பலம் இருந்தாலும் அங்கே அவற்றை இலகுவாக இயக்க இப்பொழுது தேவை.
சாப்பிட வழி இல்லாத நாட்டிலும் அந்நாட்டின் நகர்வுக்கு IT கட்டாய தேவையாகிறது.
விடயத்துக்கு வருவோம்.
ஆம் 10 வருடங்களுக்கு முன்னர் உலகில் IT வல்லுணர்கள் என்றால் இந்தியர்கள் என்பதும். அவர்களின் பங்கு நாசா தொடக்கம் கூகுல் வரைக்கும் ஆதிக்கம் செலுத்தியது நட ந்து வந்த பாதையில் கண்ட காட்சிகளின் ஞாபகங்கள்.
இருந்தும் இப்பொழுது உலகில் பல சிறிய பகுதிகளிலும் பல IT வல்லுணர்கள் பல கோணங்களில் முன்னேறி வருகிறார்கள். ஏன் வல்லரசு நாடுகளும் தமது நாட்டில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காகவும் ஊதியத்தில் மிகுதிப்படுத்தவும் தத்தம் நாடுகளில் IT துறையை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இருந்தும் இந்திய IT ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு பெரிய பாடுகளில் குறையவில்லை.
அதன் காரணம் என்ன என திரைமறைவில் இருக்கும் உண்மையை ஆராய்ந்தால்
1. உலகப் பரப்பில் IT நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் தொழில் புரிவோர் இந்திய வம்சாவழியாக இருப்பது. அவர்கள் தமது நாட்டு ஊழியர்களுக்கு முதல் இடம் கொடுக்கிறார்கள்.
2. அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் இந்திய IT ஊழியர்களில் 75% ஆனோர் தாய் மொழியையும், கிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழி ஆற்றல் மிகுந்தவர்களாக இருப்பதால் தலைமை பீடத்தில் இருப்பவர்களுக்கு அவர்களை கொண்டு நடத்த இலகுவாக இருக்கிறது. அத்தோடு அதிக வேலைகளை பெற முடிகிறது. இதனால் நிறுவன தலைமைப்பீடமும். அனுமதிக்கிறது.
3. பொறுப்பாளர் இந்தியன் என்பதால் அவர் தனது தாய் நாட்டு ஊழியர்களுக்கு முதல் உரிமையை கொடுக்கின்றார்.
4. அடுத்து மிக முக்கியமான விடயம் வெளிநாடுகளில் பல வங்கிகள் IT மென்பொருள் (software) தொழில் நுட்ப நிறுவனங்களின் குறூப் லீடராக இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் இருந்து இயங்கும் IT college உடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் செய்துள்ளமை. இதனால் குறூப் லீடருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.
இப்படியான மேலும் பல காரணங்களால்தான் இந்தியர்கள் மேலும் பல நாடுகளில் IT இக்கு படையெடுத்து செல்ல கூடியவாறு இருக்கிறது.
இதில் ஒரு அறியப்படாத செய்தி.
வெளிநாடுகளுக்கு IT வேலைவாய்ப்புக்களுக்கு செல்வோரில் கனிசமாக35% ஆனவர்கள் 3-12 இற்க்குள் வேலையிழந்து நாடு திரும்புகின்றனர்.
மிகுதியானவர்களில் கணிசமசமானவர்கள் அந் நாட்டிலேயே சொந்த வீடு வாசலுடன் செட்டில் ஆகி விடுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் இவ்வுலகம் IT இன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. IT துறைக்கு முடிவு இல்லை. காரணம் IT துறைக்கே தெரியாது எது தன் திசை என்பது.
நடந்து வந்த. வந்து கொண்டிருக்கும் வழியில் IT ஆல் அதிக குழப்பம். அதிக எதிரி, அதிக ஆசை. அதிக போட்டி. அதிக மிகைப்படுத்தப்பட்ட தன்னம்பிக்கை. அதிக இழப்புகளை காண்கிறோம்.
வாழ்வுக்கு ஒரு எல்லை உண்டு. எது எல்லை என அறியாத வாழ்வு. நரகத்துக்கு சமானம்.
கண்டுபிடிப்புக்கள் தேவை அதற்க்கும் ஒரு எல்லை வேண்டும்.
இயந்திரத்தையும் தொழில் நுட்பத்தையும் கண்டுபிடித்ததே தான் சற்று ஓய்வெடுத்து வாழ்க்கையை இலகுவாக்க ஆனால்
மனிதன் தற்பொழுது தன்னையே இயந்திரமாக மாற்றி மேலும் IT இயந்திரத்துக்குள் தானும் திணிக்கப்படுகிறான்.
ஆம் இது ஒரு ஆக்கபூர்வமான பாதை அல்ல. இவன் தன்னையும் இவ்வுலகத்தையும் அழிவு பாதைக்குள் இட்டுச் செல்கிறான்.



