குருநகர் கடலில் 5 வருடங்களின் பின்னர் நிகழ்ந்த நிகழ்வு! ஆயிரக்கணக்கான மக்கள் திரழ்வு

குருநகர் கடலில் 5வருடங்களின் பின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதை தியானம்
நேற்று (24.03.2023) வெள்ளிக்கிழமை குருநகர் கடலில் நடபெற்றது.
குருநகர் பங்கிலே முதன்முதலில் அருட்பணி ம. இம்மானுவேல் பயஸ் அடிகளாரின் காலத்திலே (1973-1976) கடலில் மின்னொளியில் சிலுவைப்பாதை காட்சிப்படுத்தப்பட்டது.
இரண்டாவது தடவையாக 2018ம் ஆண்டில் குறித்த ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் பெரும் முயற்சியினால் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி இ. இரவிச்சந்திரன் அடிகளாரின் ஆலோசனையில் ஆசிரியர் இக்னேஷியஸ் பிரபா அவர்களின் நெறிப்படுத்துதலில் 5 காட்சிகளுடன் கடல் சிலுவைப்பாதை தியானம் காட்சிப்படுத்தப்பட்டது.
மீண்டும் குருநகர் பங்கு திரு இருதய சபையினரால் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் ஆலோசனையில் திருவாளர் ஜெகன் கரண்சன் அவர்களின் நெறிப்படுத்துதலில் 24/03/2023 வெள்ளிக்கிழமை மாலையில் கடல் சிலுவைப்பாதை தியானம் இடம்பெற்றது.
இத்தியானம் தொடர்மாடி கடற் பரப்பிலிருந்து ரேகடி புனித அந்தோணியார் சிற்றாலய கடற்பரப்பு வரை 7திருப்பாடுகளின் காட்சி காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிட தக்கது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இயேசுவின் பாடுகள் உயிரோட்டமாக காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






