IMF இன் நிபந்தனைகளுக்கு அமைய 400 அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்!

#IMF #government #SriLanka #sri lanka tamil news #Litro Gas #Lanka4
Prathees
2 years ago
IMF இன்  நிபந்தனைகளுக்கு அமைய 400 அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்!

எதிர்காலத்தில் நானூறு அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சில அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் நடத்திய கலந்துரையாடல்களிலும் இந்த மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான அலகொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், அந்த அலகினால் அடையாளம் காணப்பட்ட அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், லிட்ரோ கேஸ் மற்றும் டெலிகொம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!