பொலிஸ் மா அதிபருக்கு 03 மாத சேவை நீடிப்பு?
#Police
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamilnews
Prathees
2 years ago

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோருடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் உத்தியோகபூர்வ சேவைக் காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தது.



