புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா மற்றும் கனடா
#Asylum_Seekers
#Agreement
#Canada
#America
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago
அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய இருக்கின்றன.
இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழையும் முயற்சியில் எல்லைப்பகுதியில் உயிரிழந்துகிடந்த சம்பவம் நினைவிருக்கலாம்.
அதாவது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர்.தற்போது, இப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.