தாய்லாந்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் மூவர் பலி

#Thailand #GunShoot #Attack #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
தாய்லாந்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் மூவர் பலி

தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக சுட்டார். இதில் அங்கிருந்தவர்களின் பீதியில் அலறினர். 

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வீட்டை சுற்றி வளைத்தனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

இதனால் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!