டுவிட்டரில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புளூ டிக் நீக்கம்
#Twitter
#Account
#ElonMusk
#Social Media
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது.
டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக் நீக்கப்படும் என டுவிட்டர் அறிவித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் சில நாடுகளில் படிப்படியாக கொண்டுவரப்பட்ட டுவிட்டர் புளூ சந்தா முறை தற்போது உலகளவில் வெளியாகி விட்டது.
புதிய அப்டேட்டின் மூலம் டுவிட்டர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு இருந்த வெரிஃபைடு செக்மார்க் நீக்கப்படுகிறது.



