பெரிய பட்ஜெட் படங்களில் ஐஸ்வர்யா மேனன்.
#TamilCinema
#Actress
Mani
2 years ago
ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அமைதியாக வளர்ந்து வருகிறார். தற்போது சில பெரிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.