ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 74ஆவது ஆண்டின் பிறந்தநாளுக்கான ஆசி வழங்கல் பூஜை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 74ஆவது ஆண்டின் பிறந்தநாளுக்கான ஆசி வழங்கல் பூஜை
யாழ். மாவட்ட தேசிய இளைஞர் முன்னணி எற்பாட்டில், நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கான விஷேட ஆசி வழங்கும் பூஜைகள் இன்று கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி புதுக்கோவில் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்வானது யாழ். மாவட்ட தேசிய இளைஞர் முன்னணி செயலாளர் தர்ஷன் சர்மா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதுக்கோவில் முருகனுக்கு விஷேட அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன.
இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான விஷேட ஆசி உரையினை யாழ். பொன்னாலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தான பிரதமகுருக்கள் ஸ்ரீ கந்தசோமஸ்கந்த குருக்கள் வழங்கினார்.
இதில் ச.லிங்கேஸ்வரக்குருக்கள், பிரணபநாதன், குருக்கள், இளைஞர் அணியின் செயற்பட்டாளர்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



