சூரிக்கு தேடி வந்து குவியும் அடுத்தடுத்த வாய்ப்புகள்

#soori #Actor #Film #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
2 years ago
சூரிக்கு தேடி வந்து குவியும் அடுத்தடுத்த வாய்ப்புகள்

சூரி இப்போது காமெடியனில் இருந்து ஹீரோவாக ப்ரமோஷன் அடைந்து விட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்த சூரியின் நடிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற விட்டுள்ளது.

அதனாலேயே தற்போது அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் அவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து சமீபத்தில் வெளிவந்த அறிவிப்பு டீசர் அனைவரையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மதயானை கூட்டம் பட இயக்குனர் சூரியிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை பிடித்து போனதால் அவரும் அதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அதைத்தொடர்ந்து மாவீரன் பட தயாரிப்பாளருடனும் இவர் கூட்டணி அமைத்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார்.

அதனாலேயே சூரிக்கு இந்த வாய்ப்பு சுலபமாக கிடைத்துவிட்டதாம். அந்த வகையில் சிவகார்த்திகேயன் அண்ணனுக்காக மறைமுகமாக இப்படி ஒரு உதவியையும் செய்து இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது நேரடியாக ஒரு படம், மறைமுகமாக ஒரு படம் என்று சிவகார்த்திகேயன் மூலம் சூரிக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படங்கள் வெற்றி பெற்றால் சூரியை வைத்து அடுத்த படங்களை தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவரும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே சூரியை வளர்த்து விட சிவகார்த்திகேயன் முன்வந்திருக்கிறார்.

ஏற்கனவே விடுதலை திரைப்படம் சூரியை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அதில் அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருவதால் இனி அவரை காமெடியனாக பார்க்க முடியாது என்பது உறுதியாக தெரிகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூரியின் இடத்திற்கு தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!