நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை குழுவின் தலைவராகப் டிலான் பெரேரா தெரிவு

#dilan perera #President #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை குழுவின் தலைவராகப் டிலான் பெரேரா தெரிவு

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா  பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.

இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன், கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகள் பற்றிய அலுவலகம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தத் திணைக்களம், அரசாங்க மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் குழு முன்னிலையில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!