92வது வயதில் 5வது திருமணம் செய்துகொள்ளவுள்ள ஆஸ்திரேலிய தொழிலதிபர்

ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரான ரூபர்ட் முர்டோக் அவர்களின் வயது 92 ஆகும். இவர் தற்போது ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கின்றார். இவர் திருமணம் செய்து கொள்ளும் பெண் 66 வயதான ஆன் லெஸ்ஸி ஸ்மித் ஆவார்.
இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவர் செஸ்டர் ஸ்மித் ஆவார். இவர் ஒரு நாட்டுப்புற பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தார்.
இந்த நிலையில் ரூபர்ட் முர்டோக் மற்றும் லெஸ்ஸி இருவரும் வருகின்ற மே மாதத்தில் திருமணம் செய்யகொள்ள தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து முட்டோக் கூறியதாவது “நாங்கள் இருவரும் வாழ்க்கையின் இரண்டாவது பாதியை ஒன்றாக கழிக்க எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ரூபர்ட் முர்டோக் தான் திருமணம் செய்யகொள்ள போகும் லெஸ்ஸிகாக அஸ்ஷர்-கட் வைர மோதிரத்தை வாங்க முடிவு செய்துள்ளாராம்.



