வியட்நாம் துறைமுக சுங்க அதிகாரிகளால் 7 டன் யானை தந்தங்கள் மீட்பு

வியட்நாம் நாட்டில் யானை தந்தங்கள், பார்கோலின் செதில்கள், காண்டாமிருகம் கொம்புகள், புலி சடலங்கள் உள்ளிட்டவைகள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது
ஆனால் இது பெரும் சட்டவிரோதமான செயல். இந்த நிலையில் அந்நாட்டில் ஹைபோங் நகரில் அமைந்துள்ள லோம் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கோலா பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்துவதற்காக சுமார் ஏழு டன் யானை தந்தங்கள் ஒரு கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை கண்ட அதிகாரிகள் உடனடியாக அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் கடந்த மாத இறுதியில் 600 கிலோ கிராம் எடையுள்ள ஆப்பிரிக்கத் தந்தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதனை கடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.



