யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து

#Accident #Jaffna #Police #Arrest #Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும்  இன்று செவ்வாய்க்கிழமை மோதி விபத்துக்குள்ளானது.

 சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பியது.

இன் நிலையில் முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்வாகனம் முற்றாகச் செய்தமடைந்தது.

இவ் விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர்வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். விபத்தில் கப் வாகனச் சாரதி தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை.

 விபத்து தொடர்பாக சாவகச்சேரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!