கடன் மறுசீரமைப்பை உரியமுறையில் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் பொருளாதாரப் பாதையில் செல்வதை உறுதி செய்வதற்காக கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை உரியமுறையில் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையின் சர்வதேச நாணய நிதியப் பொதிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.
இது ஒரு சிறந்த செய்தி என்றும் பொருளாதார மீட்சிக்கான பாதையில் இது ஒரு முக்கியமான படி என்றும் கூறியுள்ளார்
இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நிறைவுச்செய்ய வேண்டும்.
நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மை, நீடித்த சீர்திருத்தங்கள் போன்றவை, இலங்கையின் அனைத்து குடிமக்களும் நன்மை பெறுவதை உறுதிசெய்வதற்கு மிகவும் முக்கியமானவை என்றும் தூதுவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.



