இலங்கைக்கு நிதி கிடைத்தாலும் கடினமான பாதை உள்ளது: மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம்

#IMF #SriLanka #sri lanka tamil news #government #Lanka4 #Dollar
Prathees
2 years ago
இலங்கைக்கு நிதி கிடைத்தாலும் கடினமான பாதை உள்ளது: மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு வெள்ளித் தோட்டா அல்ல என மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலதரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கைக்கு கடினமான பாதை உள்ளது என்று மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது

இதனையடுத்து இந்த உதவியை அடுத்து,  ஏனைய தரப்புக்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 7 பில்லியன் டொலர்கள் வரை நிதியுதவியை பெற உதவும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவும் தெரிவித்திருந்தது.

எனினும் சர்வதேச நாணய நிதியுதவி, அவர்கள் நினைக்கும் வெள்ளி தோட்டா இல்லை' என்று மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கத்ரீனா கூறியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புகளில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை காணாத வரையில் நிதிச் சந்தைகளில் வெளிப்படும் உற்சாகம் உண்மையில் மங்கிவிடும்.

வரவிருக்கும் மாதங்களில் நாடு பெறும் அனைத்து கூடுதல் நிதிகளும் நல்ல செய்தியாக இருக்கும்.
எனினும்  நிதி விவேகம் மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர் கூறியுள்ளார்;.

இலங்கைக்கு எவ்வளவு சாத்தியமான நிதி அல்லது ஆதரவு வீசப்பட்டாலும் அது இன்னும் கடினமான பாதையாகவே இருக்கும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கத்ரீனா எல் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!