வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு!

#SriLanka #Sri Lanka President #government #Department #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம் குறித்த முகவர் நிலையங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 3 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 750,000 ரூபாவிலிருந்து 3 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது வருடத்தில் இருந்து 5 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகளை கடுமையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!