உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்த தீர்மானம்
#SriLanka
#strike
#Sri Lanka Teachers
#Lanka4
Kanimoli
2 years ago
ஆசிரியர் சங்கத் தலைவர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளரின் ஆசிரியர் இடமாற்றச் சபைப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவடைந்ததாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் நாளை(22) கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்று கூடி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தீர்மானித்துள்ளது.
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்கும் திடீர் தீர்மானத்துக்கு அரசாங்கம் தீர்வை வழங்கவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.