எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் மாயம்

வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் இன்று காலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவில் உயிரிழந்த நால்வரும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
காணாமல் போன 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் குளிப்பதற்கு அனுமதியில்லை என தெரிந்தும் மீறி நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடியிருப்பாளர்களின் எச்சரிக்கையையும் மீறி குறித்த குழுவினர் குறித்த இடத்தில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமற்போன இளைஞரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் உயிர்காப்புப் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் , வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



