மரவெள்ளிக் கிழங்கு தொடர்பில் மக்கள் விசனம்!

நாடுமுழுவதிலும் உணவிற்கு பயன்படுத்தப்படும் மரவள்ளிக் கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
இதற்கு முன்னர் ஐம்பது ரூபாவிலிருந்து நூறு ரூபாவிற்குள் இருந்த மரவள்ளிக் கிழங்கு சற்று அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக 200 ரூபாயிலிருந்து 250 ரூபாவரையில் விற்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக நுகர்வோர் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொறுத்தவரையில் மரவள்ளிக் கிழங்கு ஒரு பிரதான உணவாக இருந்து வருகின்றது.
ஆனால் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரிதளவில் மரவள்ளிக் கிழங்கை வாங்குவதில்லை எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் மண்ணெண்ணெய்யின் விலை சற்று குறைவடைந்த நிலையிலும் சில மரக்கறிகள் விலைகளில் மாற்றமில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பில் உரியவர்கள் தலையிட்டு விலை தொடர்பில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



