இலங்கையின் உள்நாட்டுக்குள் சேவையை ஆரம்பிக்கும் இந்திய விமானங்கள்!
#SriLanka
#India
#Colombo
#Flight
#Airport
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் இந்திய விமானங்கள் மூலம் பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே வாரத்துக்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பொருளாதார பலன்களுக்கு மேலதிகமாக இரு நாடுகளும் பல நன்மைகளைப் பெற்றுள்ளதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.



