தொழில் வல்லுநர்களின் முக்கிய கலந்துரையாடல் இன்று

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொழில் வல்லுனர்களின் ஒன்றியம் இன்று கூடவுள்ளது.
மேலும் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காலை 08 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் காரணமாக இன்றைய நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த புகையிரத தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டன.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை வாபஸ் பெறுதல், மின் கட்டணக் குறைப்பு, வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் நேற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.



