யாழ். எடிசன் கல்விநிலையத்தின் நிர்வாகி ஆசிரியர் பாஸ்க்கரன் காலமானார்
#SriLanka
#Jaffna
#Institute
#Death
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

யாழில் “எடிசன் அக்கடமி” என்ற பெயரில் இயங்கிய பிரபல தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி ஆசிரியர் பி.பாஸ்க்கரன் தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக சிகிச்சை பெற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
30 வருடங்களுக்கு மேலாக யாழில் க.பொ.த சாதாரணதரம் வரையான வகுப்புகளை மிகவும் வினைத்திறனான முறையில் நடாத்தி தான் கற்பிக்கும் கணிதபாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற வைத்து ஏராளமான மாணவர்களை உயர்தரம் வரை கற்கச் செய்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.



