வடகொரிய ஜனாதிபதி பற்றி வலைத்தளத்தில் தேடிய நபருக்கு மரணதண்டனை
#NorthKorea
#President
#Social Media
#people
#Death
#Prison
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து கூகுளில் தகவல் தேடிய உளவு துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளியுறவு தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடை விதித்தார். இதன் காரணமாக வடகொரியாவில் இணையதளம் பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ப்யூரோட்டின் என அழைக்கப்படும் நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி கூகுளில் கிம் ஜாங் உன் குறித்து தேடி உள்ளார்.
இதனால் அவருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகொரிய அதிபரின் இந்த உத்தரவு அங்குள்ள மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



