வறுத்தளைவிளான் குள மண் அகழ்வு -அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

#Human #Human Rights #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
வறுத்தளைவிளான் குள மண் அகழ்வு -அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வலி. வடக்கு வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில்  சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபாகரனால் வழங்கப்பட்ட நிலையில் முறைப்பாட்டில் பின்வரும் விடயங்கள் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இருந்து சுமார் 150 லோட் மணலை  வலி வடக்கு பிரதேச சபைத் காலர் அனுமதித்ததாக தெரிவித்து தனியார் ஒருவர் ஏற்றி விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு மணல் ஏற்றும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர் ஊடாக தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு அறிவித்த நிலையில் அங்கு நின்ற டிப்பர் வாகனத்தையும் மணல் ஏற்றியவர்களையும் பொலிசாரிடம் பிரதேச செயலர் ஒப்படைக்கவில்லை.

மேலும் பிள்ளையார் குளத்தில் சட்ட விரோதமான மணல் அகழ்வு இடம் பெறுவதாக காங்கேசன் துறை போலீசாருக்கு தகவல் வழங்கப்படும் போலீசார் நடவடிக்கை எடுக்காமை போன்ற விடையங்களை முன்வைத்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!