அமைச்சர் டக்ளஸ் மீது வர்ணகுலசிங்கம் காட்டம்

#Douglas Devananda #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
அமைச்சர் டக்ளஸ் மீது வர்ணகுலசிங்கம் காட்டம்

பள்ளிகுடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்தொழில் அமைச்சர் பெருபான்மையான மக்கள் எதை விரும்புகின்றார்களோ அதனையே தான் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். எனவே யாழ்  மாவட்த்திலுள்ள ஒட்டுமொத்த மீனவர்களும் அட்டைப் பண்ணையை வெறுப்பதாகவும் அதனை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை என வடமராட்சி வடக்கு, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமான அனைத்து தொழில்களுக்கு கடற்தொழல் அமைச்சர் அனுமதி வழங்குகின்றார். ஏன் அதனை அவரால் நிறுத்த முடியவில்லை.

எனவே டக்ளஸ் தேவானந்தா சட்ட விரோத தொமிலுக்குரிய அமைச்சரா? கடற்தொழில் மக்களுக்காக டக்ளஸ் தேவானந்தா எதனையும் செய்யவில்லை.

சுட்டிக்குளம் பூனைதொடுவாய் ஆகிய பகுதியில் ஒருவர் எந்த அனுமதியையும் பெறாது கொட்டில் அமைந்து அட்டை பண்ணையை செய்வதற்கு முயற்சிக்கின்றார். இதற்கு அனுமதி வழங்கியது யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!