மகளிர் விவகார அமைச்சு தனது கட்டுப்பாட்டுக்குள்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சக்தி வாய்ந்த இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தில் இந்நாட்டு பெண்களின் அதிகபட்ச பங்களிப்பை பெறும் நோக்கில் மகளிர் விவகார அமைச்சு தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இந்நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பை பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக எனது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும்.
நிர்வாக மற்றும் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைக்குள் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, அரச, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க விரிவான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.



