பாலின சமத்துவம் 'நம் கண் முன்னே மறைந்து வருகிறது! ஐ நா பொதுச்செயலாளர்

பாலின சமத்துவம் 'நம் கண் முன்னே மறைந்து வருகிறது' என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பெண்கள் தொடர்பான மதிப்பீட்டின்படி, பாலின சமத்துவம், '300 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
குட்டரஸின் அறிக்கை கடந்மத திங்கட்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரவையில் உரையாற்றிய குட்டெரெஸ், ஆப்கானிஸ்தானில் 'பொது வாழ்க்கையிலிருந்து பெண்கள் அழிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.
நூற்றாண்டு கால ஆணாதிக்கம், பாகுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பாலின இடைவெளியை உருவாக்கியுள்ளன.
இந்தநிலையில் உலக கட்டமைப்புகள் உலகின் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக பணி செய்யவில்லை என்றும் என்ட்னியே குட்டரஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.



