இலங்கைப் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு விசேடமானது: ஜனாதிபதி

இலங்கைப் பெண்களின் இந்த பன்முகப் பாத்திரங்களை அமுல்படுத்தி சக்திவாய்ந்த இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில் இலங்கைப் பெண்களின் அதிகபட்ச பங்களிப்பைப் பெறும் நோக்கில் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சு தற்காலிகமாக தனது அதிகாரத்தின் கீழ் எடுக்கப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவள் நாட்டின் பெருமை' என்ற தொனிப்பொருளில் இம்முறை இலங்கையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள செய்தியில், எழுத்தறிவில் முன்னணியில் திகழும் இலங்கைப் பெண்கள், இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விசேடமானது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இந்த நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பை பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக தமது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், '2048இல் அபிவிருத்தியடைந்த நாட்டை' உருவாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்ய, அனைத்துப் பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் தளங்களில் பாலின அடிப்படையிலான வன்முறையை கட்டுப்படுத்துவதற்கும், மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான முறைப்பாடு மற்றும் விசாரணைப் பொறிமுறை அவசியம் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயத்தில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும் என, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி கலாநிதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



