அவள் நாட்டின் பெருமை: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வதேச மகளிர் தினம்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Women #Womens_Day #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
அவள் நாட்டின் பெருமை: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வதேச மகளிர் தினம்

"அவள் நாட்டின் பெருமை" என்ற தொனிக் பொருளில் இன்று சர்வதேச மகளிர் தினம் இலங்கையில் கொண்டாப்பட்டுகின்றது.

இந்த வருடத்திற்கான மகளிர் தின விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெறவுள்ளது.

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழைப் பெற்ற நான்கு விதிவிலக்கான பெண்களும் இங்கு அங்கீகரிக்கப்படவுள்ளனர்.

இதன்படி, இரண்டு கால்களையும் ஒரு காலையும் இழந்த நிலையிலும் கல்வியில் உச்சத்திற்கு வந்த மூத்த பாடகி விசாரதா சுஜாதா அத்தநாயக்க, மூத்த நடிகை ஷ்ரியானி அமரசேன, மூத்த எழுத்தாளர் அனுலா டி சில்வா மற்றும் செல்வி ரஷ்மி நிமேஷா குணவர்தன ஆகியோர் இங்கு அங்கீகரிக்கப்படவுள்ளனர்.

மேலும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட வெற்றிகரமான தொழில்முனைவோர் இங்கு மதிப்பீடு செய்யப்படுகின்றனர். இந்த நிகழ்வில் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்கவும் பங்கேற்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!