'மார்க் ஆண்டனி' படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

#TamilCinema #Actor #Director
Mani
2 years ago
'மார்க் ஆண்டனி' படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

லத்தி படத்திற்கு பிறகு விஷாலின் 33வது படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன்  போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு "மார்க் ஆண்டனி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகியாக ரிது வர்மா நடிக்கிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் நடந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் செல்வராகன் நடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். சிரஞ்சீவியாக செல்வராகவன் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவனின் இந்த ரெட்ரோ ஸ்டைல் ​​போஸ்டர் பல ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!