1 பில்லியன் டொலர் இந்தியக் கடன் வரியை நீடிப்பதற்காக, இலங்கை,இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
#IMF
#money
#Dollar
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை உறுதியாகியுள்ள நிலையில்,1 பில்லியன் டொலர் இந்தியக் கடன் வரியை நீடிப்பதற்காக, இலங்கை,இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதனை ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
தற்போதைய கடன் வரி மார்ச் 17 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையிலேயே புதிய கடன் வரி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இதுவரைக்கும் இந்திய கடன்வரியின் இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்தே ஒரு பில்லியன் டொலர் கடன் வரியை சில மாதங்களுக்கு நீ;டிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



