இலங்கையில் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து.

#United National Party #European union #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கையில் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து.

இலங்கையில் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில்,பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் நேற்று  மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.

இந்தநிலையில் மீட்புக் கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும், மேலும் சமூகப் பாதுகாப்புகள் மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல், அத்துடன் வேரூன்றிய தண்டனையின்மை போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்திக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், குடியியல் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் டேர்க் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!