மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
#Police
#GunShoot
#Hospital
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Prathees
2 years ago

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுவில பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
நேற்று (07) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டவர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



