சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை

#China #Women #advertisements #Ban #Sexual Abuse #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை

சீனாவில் ஆபாசமான விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதை தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. 

ஆபாச ரீதியான வீடியோக்கள் பரவுவதை தடுக்க பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தடை எதிரொலியால், பேஷன் நிறுவனங்கள் பெண்களுக்கு பதிலாக ஆண் மாடல்களை நடிக்க வைக்கும் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. 

அதன்படி, பெண்களின் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்களை பணியமர்த்தி வருகின்றன. சீன அரசு விதித்த தடையால், வேறு வழியின்றி பெண்களுக்கு பதிலாக ஆண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். 

வீடியோக்களில், ஆண் மாடல்கள் பல விதமான பெண்களின் உள்ளாடைகளை அணிந்து விளம்பரம் செய்து வருகின்றனர். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!