பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து - 14 பேர் பலி
#Bangladesh
#BombBlast
#Death
#Rescue
#Hospital
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago
வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.
குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் சானிடரி பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.