நாட்டை முடக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாரிய பிரச்சினைகளை தீர்க்க முடியாது! கரு ஜயசூரிய

பாராளுமன்றத்தை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது நாட்டை முடக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமோ நாட்டின் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என்பது தமது ஏக நம்பிக்கை என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். .
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றுமையின்மை காரணமாக பெருமளவிலான உயிர்களையும் தேசிய வளங்களையும் அழித்ததாகக் கூறும் கரு ஜெயசூரிய, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது துரதிஷ்டவசமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த வேட்பாளர் நிமல் அமரசிறியினை நினைத்து தாம் மிகவும் வேதனையடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சியினதும் மற்றும் பொதுவாக அனைத்து மக்களினதும் தேசியக் கடமையாகும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் விரும்பிய இலக்கை அடைய, எதற்கும் முன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறிய கரு ஜயசூரிய, அரசியல் அல்லது அதிகார நோக்கங்களில் இருந்து விலகி, கூட்டாகச் செயல்பட வேண்டும்,எந்தவொரு பாதகமான நடவடிக்கைகளுக்கும் பங்களிக்காமல் இருக்க வேண்டும். அது ஒரு முழுமையான பொறுப்பாக கருதப்பட வேண்டும் என்றும், அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



