மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்
#SriLanka
#Sri Lanka President
#students
#College Student
#Student
#Police
#Attack
#Lanka4
Mayoorikka
2 years ago
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் சற்று முன்னர் இந்த தாக்குதலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனமும் (IUSF) இந்த எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.