இந்தியா டுடே பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாதிரிகள்: ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதர் உரை

#India #world_news #Model
Mani
2 years ago
இந்தியா டுடே பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாதிரிகள்: ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதர் உரை

சர்வதேச மகளிர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் ஐ.நா.வில் பேசுகையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய இந்தியா இன்று செயல்பட்டு வருகிறது.

பெண்களை இல்லத்தரசிகளாக மட்டும் பார்க்கக்கூடாது, தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் பார்க்க வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி கூறிய பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இது.இன்று, இந்தியா பெண்களுக்கான வளர்ச்சி மாதிரியிலிருந்து பெண்களால் வழிநடத்தப்படும் வளர்ச்சிக்கு மாறுகிறது.

இந்தியாவின் இந்த மாற்றம், நாங்கள் தலைமை தாங்கிய ஜி-20 உச்சிமாநாட்டில் பெண்கள் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் எங்கள் முடிவில் பிரதிபலிக்கிறது.எதிர்காலத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்றால், பெண்களை விவாதம் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையின் மையப் பகுதியாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!