வவுனியாவில் வீடொன்றில் இருந்து குடும்பத்திலுள்ள 4 பேரின் சடலங்கள் மீட்பு!

வவுனியா குட்ஷெட் தெருவில் உள்ள வீடொன்றில் இன்று காலை பெற்றோர் மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், தந்தை தற்கொலை செய்து கொண்டமை அவதானிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை 41 வயதுடைய ஆண் எனவும், தாய் 36 வயதுடைய பெண் எனவும், உயிரிழந்த இரு சிறுமிகளும் 09 மற்றும் 03 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
வீட்டில் இரண்டு நாற்காலிகளில் இரு குழந்தைகளின் சடலங்களும், வீட்டின் படுக்கையறையில் மனைவியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



