டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

#SriLanka #prices #Bank #Central Bank #Dollar #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது.

 அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 335.75 ஆக இருக்கின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.

தரகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைகிறது.

தொடரும் நாட்களில் ரூபாய் மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!