விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படத்தில், அஜித்துக்கு வில்லனாக ரொமான்டிக் ஹீரோ

#ajith #ak62 #Vijay #leo #Actor #Director #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
2 years ago
விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படத்தில், அஜித்துக்கு வில்லனாக ரொமான்டிக் ஹீரோ

வாரிசு, துணிவு படத்திற்கு பிறகு விஜய், அஜித்தின் அடுத்த படங்களான லியோ மற்றும் ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் படக்குழு எகிற விட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு பாலிவுட் முதல் டோலிவுட் வரை ஏகப்பட்ட வில்லன்களை களம் இறக்கி உள்ளனர்,

இந்நிலையில் லியோ படத்தை ஓவர் டெக் செய்யும் வகையில் மகிழ் திருமேனியும் அஜித்துக்கு வில்லனாக தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவை தர இறக்கி உள்ளார். ஏகே 62 படத்தின் கதை விவாதம் வேகவேகமாக ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்து வருகிறது.

இதில் அஜித் முடிந்தவரை கலந்து கொள்கிறார். இந்த படத்திற்கு வில்லனாக முதலில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி இவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது நடிகர் ஆர்யாவிடம் மகிழ்திருமேனி பேசியிருக்கிறார். அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது, நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறாராம்.

ஆர்யா, மகிழ்திருமேனி இருவரும் நெருங்கிய நண்பர்கள். அஜித் படத்தில் ஆர்யா கண்டிப்பாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல லியோ படத்திற்கு போட்டியாக நிறைய வில்லன்களை வைத்து கதை தயார் செய்துள்ளாராம் மகிழ் திருமேனி. அதற்காகவே அஜித்துக்கு தரமான வில்லனை மகிழ் திருமேனி தேர்வு செய்துள்ளார்.

சமீப காலமாகவே விஜய் சேதுபதி, சூர்யா, பிரசன்னா, வினைய் போன்ற ஹீரோக்கள் எல்லாம் வில்லனாக நடித்து ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஆர்யாவும் கொடூரமான வில்லனாக ஏகே 62 என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

இந்த தகவல் தல ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. தற்போது ஆர்யா, பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஏகே 62 படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!