அரசியலமைப்பு பேரவை, நாளை மறுநாள் மார்ச் 9 ஆம் திகதி கூடவுள்ளது - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
#mahinda yappa abewardana
#speaker
#Parliament
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

அரசியலமைப்பு பேரவை, நாளை மறுநாள் மார்ச் 9 ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் இதன்போது உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர்.
உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, கையூட்டலுக்கு எதிரான ஊழல் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கே புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.



