சீனா சர்வதேச கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாததால் சுமார்; 10 மில்லியன் ரூபா நட்டம்
#China
#India
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

2021ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனா சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதித்துவம் இல்லாததால், இலங்கைக்கு சுமார்; 10 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய கணக்காய்வு அலுவலகம்; வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக,இலங்கை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை,கண்காட்சிக் கூடங்களைத் தயாரிக்க 7.2 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.



