கிளிநொச்சியில் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீட்பு

கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளர் முற்றத்தில் குழி தோண்டிய போது அதில் பை ஒன்றும், ஆயுதங்கள் சிலவும் காணப்பட்டதுடன், இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பளை பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளின் போது புதைக்கப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
02 கைக்குண்டுகள், T56 தோட்டாக்கள் 175 மற்றும் ஒரு மகசீன் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
போரின் போது விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இதனைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியை நாடவுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



