தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி யாழில் கலந்துகொள்ளவுள்ள நிகழ்வு
#SriLanka
#Jaffna
#India
#Tamil
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

காரைநகர் மணற்காடு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 6ம் திருவிழா உபய காரர்களின் ஏற்பாட்டில் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணிக்கு தென்னிந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி நித்யஶ்ரீ மகாதேவனும் அவரது புத்திரியும், அவரது சொந்த பக்கவாத்தியக்கலைஞர்களுடன் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக திருவிழா உபயகாரர்களான காரைநகரை சேர்ந்த கணேசபிள்ளைபாலச்சந்திரன், சுப்பிரமணியம் கதிர்காமநாதன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி நித்யஶ்ரீ மகாதேவனும் அவரது புத்திரியும் அவரது சொந்த பக்கவாத்தியக்கலைஞர்களுடன் வழங்கும் மாபெரும் இன்னிசை நிகழ்வு ஆலய முன்றலில் பிரமாண்ட மேடையில்இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.




