உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகளில் போராட்டம்!
#SriLanka
#Protest
#Australia
#Newzealand
#Election
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று நேற்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தது.
நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் உள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியை ஆதரிக்கும் இலங்கையர்களால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அங்கு, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும், மக்களின் வாக்குரிமையை பறிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் வாக்கு பலம் இன்றி நாட்டில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைத்து நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.



