உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள்:கூடவுள்ள அரசியலமைப்பு சபை
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Meeting
#government
#Department
#Lanka4
Mayoorikka
2 years ago

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
நிதி ஆணைக்குழு, கொள்முதல் ஆணைக்குழு, தணிக்கை ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன புதிய உறுப்பினர்களை நியமிக்கும் ஏனைய ஆணைக்குழுக்கள் ஆகும்.
அந்த ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான முதற்கட்ட பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருகின்றன



